1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:45 IST)

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது சிட்டி பேங்க்: முதலீட்டாளர்கள், ஊழியர்களின் நிலை என்ன?

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது சிட்டி பேங்க்
அமெரிக்காவில் முன்னணி வங்கியாக இருந்து வரும் சிட்டி பேங்க், இந்தியா உள்பட 13 நாடுகளில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேஷியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவெடுத்துள்ளது
 
சிட்டி பேங்க் முக்கியமான நாடுகளாகிய அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் ஆகியவைகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் பெரும் வளர்ச்சி இல்லாத நாடுகளில் இருந்து வெளியேற இருப்பதாகவும் அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார் 
 
இந்தியாவிலிருந்து வெளியேறிலும் சிட்டி பேங்க் கிளைகள் மூடப் படாது என்றும் இந்திய பிரிவை அப்படியே வேறு யாருக்கும் கைமாற்றி விட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எனவே இந்த வங்கியின் செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும் என்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வங்கியை யார் வாங்குகிறார்களோ அதுவரை தங்களுடைய கட்டுப்பாட்டில் சிட்டிபேங்க் எப்போதும் போல் இயங்கும் என்றும் சிட்டி பேங்க்கின் இந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
சிட்டி பேங்க் இந்தியாவில் கிரெடிட் கார்டு பிரிவில் முன்னணி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.  இந்தியாவில் சுமார் 35 கிளைகள் உள்ளன என்பதும் பெரும்பாலான கிளைகள் பெருநகரங்களில் மட்டும் தான் உள்ளன என்பதும் 4 ஆயிரம் ஊழியர்கள் இந்த வங்கியில் பணிபுரிந்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது