வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (17:35 IST)

அயன் பட பாணியில் விக்குக்குள் தங்கம் ! மாட்டிக்கொண்ட இளைஞர்

சில வருடங்களுக்கு முன்னர் கே.வி ஆனந்த் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரும் பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் உடலில் பல  இடங்களில் மறைத்து வைத்துக் கடத்தி வருவார் கதாநாயகன். 
தற்போது அதுபோல் ஒரு இளைஞன் தன் தலையில் விக் வைத்து அதுக்கு கீழே தங்கள் கடத்தி வந்துள்ளார். அவரை பரிசோதித்த போது மாட்டிக் கொண்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
 
கேரளா மாநிலத்திலுள்ள மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் நெளசத். இவர் சார்ஷாவில் இருந்து விமானம் மூலமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
 
அப்போது அவர் திருதிருவென முழித்துக் கொண்டிருந்ததால் அதிகாரிகளூக்கு சந்தேகம் வலுத்தது. அதனால் அதிகாரிகள் நௌசாத்தை பரிசோதித்தனர். அவரது உடலில் ஆசனவாய்பகுதியில் இருந்து பல இடங்களில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், அவர், தன் தலையில் ஒரு விக் வைத்து, அதுக்குக் கீழே 1.13 கி.கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.