1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (06:35 IST)

மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கிய பிரபல நடிகர்

மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கிய பிரபல நடிகர்
பிரபல தெலுங்கு நடிகர் தனது மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார்
 
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி குறித்து அனைவரும் அறிந்ததே. அவர் இப்போது ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தை அவரது மகன் ராம் சரண் தேஜா தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி ஒன்றை தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார் 
 
சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து தொடங்கியுள்ள இந்த ஆக்சிஜன் வங்கியில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது