1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (13:49 IST)

இந்தியாவுடன் சண்டை போட விருப்பம் இல்லை: சமரசம் பேசும் சீனா!

இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை எனவும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 
 
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 35 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. . 
 
இந்திய சீன நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது உலக போராக மாறும் அபாயம் இருப்பதால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
நேற்று இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை கூறியபோது, இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது, லடாக் எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளதாகவும்,  இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை எனவும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.