செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (17:16 IST)

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!

Ambedkar statute
ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திரம் மாநிலம் விஜய நாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில், டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாகும். இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள  பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை திறந்து வைக்கப்பட்டதால், உலகில் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை என்ற பெருமை படைக்கும்.

இன்று மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

இந்த அம்பேத்கர் சிலைக்கு அருகில் பூங்காக்கள், மினி தியேட்டர், அருங்காட்சியம்,  உணவு விடுதி,  நீரூற்றுகள்,வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.