வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2023 (19:59 IST)

அஜித்தின் பைக்கை மியூசியத்தில் வைக்க முடிவு

ajithkumar
நடிகர் அஜித்குமார் திருப்பதி படத்தில் பயன்படுத்திய பல்சார் பைக்கை மியூசியத்தில் வைக்க ஏ.வி.எம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வெளி நாட்டில் பைக் ரைடிங் செய்து வருகிறார். நேற்று ஓமனில் அஜித் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.

இந்த  நிலையில்,  நடிகர் அஜித்குமார் திருப்பதி படத்தில் பயன்படுத்திய பல்சார் பைக்கை மியூசியத்தில் வைக்க ஏ.வி.எம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில், பேரரசு இயக்கத்தில், பரத்வாஜ் இசையில் வெளியான படம் திருப்பதி. இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
 
இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித்குமார் பயன்படுத்திய பல்சர் 180 சிசி பைக்கை ஏவிஎம் ஸ்டுடியோவின் மியூசியத்தில் வைக்க வுள்ளதாக தகவல் வெளியாகிறது.