வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (13:17 IST)

10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி!

Puthucherry-biryani
பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில்  உணவகம் ஒன்று  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முயற்சி செய்துள்ளது.

சமீப காலமாக இந்திய அரசின் 10 ரூபாய் நாணயத்தை பேருந்துகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் வியாபாரிகள், மக்கள் என பலரும் வாங்காத  நிலையில், 10 ரூபாய் நாணங்களை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  புதுச்சேரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் 10 ரூபாய் நாணயத்துடன் சிக்கன் பிரியாணியை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் கடைமுன் குவிந்துள்ளனர்.