1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (17:18 IST)

பேஸ்புக்கில் குறைகள், போனில் சொல்யூசன்: ஸ்மார்ட் முதல்வர்!

தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டம், நந்துலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத். இவர் தனது குறையை பேஸ்புக் மூலம் புலம்பிதள்ள ஒரே போன் காலில் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார் முதலவர். 
 
சரத் தனது 7 ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் நிலச்சீரமைப்பில் சரத்தின் நிலப்பத்திரங்களை சிலர் போலியாக தயாரித்து கிராம நிர்வாக அதிகாரி மூலம் நிலத்தை அபகரித்துவிட்டனர்.
 
இதுதொடர்பாக கடந்த 11 மாதங்களாக பல்வேறு அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்துக்கும் சென்று தனது குறையை சரத் தெரிவித்தார். ஆனால், அவரின் பிரச்சனைக்கு தீர்வு வரவில்லை. 
இதனால், பேஸ்புக் லைவ் மூலம் பேசி நிவாரணம் தேட முடிவு செய்து அதன்படி, வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில் இந்த வீடியோ எப்படியாவது, முதல்வர் சந்திரசேகர் ராவ் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த வீடியோவை பார்த்த முடித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், தொலைபேசியில், நேரடியாக சரத்தை தொடர்பு கொண்டார். சரத்திடம் பேசிய பின்னர் அடுத்த 30 நிமிடங்களில் உங்களுடைய நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
அதேபோல், 30 நிமிடத்தில் மாவட்ட ஆட்சியர், போலீஸ், வருவாய் அதிகாரிகள் அனைவரும் சரத் வீட்டுக்குவந்து நிலத்தை மீட்டுக்கொடுத்தனர்.