ஜெகனின் சூழ்ச்சியில் சிக்கிய சந்திரபாபு நாயுடு: போட்ட திட்டமெல்லாம் வீண்!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சந்திரபாபு நாயுடுவை பல விஷயங்களில் நேரடியாகவே தாக்கி வருகிறார் ஜெகன்.
குறிப்பாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசாபுறம், பல்நாடு, உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்கு பிறகும், தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது அரசியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து பேரணியை நடத்த தெலுங்கு தேசம் கட்சி தனது நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்த பேரணியை தடுக்க நினைத்த ஜெகன் மோகன் ரெட்டி, நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களையும் வீட்டுக் காவலில் வைத்ததுள்ளது ஜெகன் மோகன் ரெட்டி அரசு.