வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:15 IST)

முன்னாள் முதல்வருக்கு இடைக்கால ஜாமீன்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 9ஆம் தேதி முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார்

உடல்நிலை மற்றும் பார்வை கோளாறு இருப்பதால் சிகிச்சை பெற வேண்டும் என ஜாமீன் கோரி அவர்  மனுதாக்கல் செய்த நிலையில் இந்த ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர் நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இன்னும் சில மணி நேரங்களில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது.

சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததை அவரது தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்



Edited by Mahendran