1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (07:58 IST)

நாடு முழுவதும் இன்று சக்கா ஜாம் - எப்படி நடக்கும் தெரியுமா?

விவசாயிகள் தங்களது போராட்டத்தை மேலும் வலிமைப்படுத்த இன்று நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' போராட்டத்தை நடத்த உள்ளனர்.  

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மேலும் வலிமையாக்க இன்று நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளனர்.  
 
சக்கா ஜாம் என்றால் என்ன? 
சக்கா ஜாம் என்பது சக்கரங்களை நிறுத்துதல். அதாவது சாலை மறியல் போராட்டம் என இதனை கூறலாம். இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ்கள், பள்ளி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறியுள்ள விவசாயிகள், இறுதியில் ஒரு நிமிடம் தொடர்ந்து வாகனங்களின் ஒலி எழுப்பப்படும் என போராட்டம் குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.