திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:03 IST)

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு நற்செய்தி: AICTE அதிரடி உத்தரவு!

உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த அகடிதத்தில், கல்வியை கைவிட்டு பாதியிலேயே உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 
 
மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது 48வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இந்த போரின் காரணமாக உக்ரைனில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.