வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (12:15 IST)

ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க.. இல்லைனா நடைபயணத்த ஒத்தி வைங்க!? – ராகுல்காந்திக்கு கடிதம்!

Rahul Gandhi
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த மூன்றாண்டு காலமாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் குறைந்திருந்தது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ள நிலையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத பட்சத்தில் நடைபயணத்தை ஒத்திவைக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Edit by Prasanth.K