வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:24 IST)

மனிதவள மேம்பாட்டு துறை to கல்வித்துறை! – மத்திய அமைச்சகத்தில் புதிய மாற்றம்!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையை கல்வித்துறை என பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து நிலை தரவுகளிலும் அது அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நிலையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் பெயர்மாற்றம் குறித்த ஆலோசனைகள் எழுந்தன. மனிதவள மேம்பாடு என பெயர் இருந்தாலும் முழுக்க நாட்டின் கல்வி குறித்த செயல்பாடுகளை இத்துறை நிர்வகித்து வருவதால் கல்வித்துறை என பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய கல்வித்துறை என பெயர்மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், அரசிதழிலும் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது இணையதளம் உள்ளிட்டவற்றிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி மனித வள் மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் என்பதற்கு பதிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் என்று அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.