வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:46 IST)

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து! – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடம் ஒன்றின் 6வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.