செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (09:25 IST)

பிரியங்கா வேண்டாம்:காங்கிரஸின் சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வி அடைந்து.

தேர்தலுக்கு முன்பு பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு உத்திர பிரதேசத்தின் காங்கிரஸ் பொது செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

இந்திரா காந்தி போல் உருவ அமைப்பு இருப்பதால் உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் அதிகமான வாக்குகள் பெரும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அங்கு படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், காங்கிரஸிற்கு எப்பவுமே கைகுடுக்க கூடிய அமேதி தொகுதியையும் அது இழந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ரகுல் காந்தி நீடிக்க விரும்பவில்லை. எனவே பிரியங்கா காந்தியை தலைவராக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால் இதற்கு பல சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சி பூர்வமாகவே கையாள்வார் என்றும், ஆனால் ராகுல் எந்த ஒரு விஷயத்தையும் தனது தொண்டர்களிடம் கலந்துரையாடியே ஒரு முடிவை எடுப்பார் என்று கட்சியின் சீனியர் தொண்டர்கள் கூறிவருகிறார்களாம்.

ஆனாலும் கட்சியின் தலைமை பொறுப்பை, பிரியங்கா காந்தி ஏற்பதில் எங்களுக்கு முழு சம்மதமே என காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.