இனி சுங்கசாவடியே கிடையாது! கேமரா மூலம் கட்டணம்! – இணை அமைச்சர் சொன்ன தகவல்!
நாடு முழுவதும் சுங்கசாவடிகளை அகற்றிவிட்டு கேமரா மூலமாக கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்படுத்த உள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வழியாக பயணிக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தி வரும் நிலையில் சுங்க கட்டணம் செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் சமீபத்தில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது பல சுங்கசாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமலில் உள்ள நிலையில் ஒரு வழி மட்டும் கட்டணம் செலுத்தி செல்லும் வாகனங்களுக்காக செயல்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சுங்கசாவடிகள் குறித்து பேசிய அவர், இன்னும் 6 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகள் அகற்றப்படும் எனவும், அதற்கு பதிலாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன எண்களை பதிவு செய்து சுங்க கட்டணம் வசூலிக்கும் புதிய முறை அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K