புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (11:58 IST)

கொரோனா அச்சம்: தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 ஆயிரத்துக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில் மனித இனத்தையே அந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகம் கொண்டால் உடனே தங்களை தாங்களே தனிமைபடுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கேரளாவில் மத்திய அமைச்சர் முரளிதரன் அவர்கள் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் பார்வையிடச் சென்றார். அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து மத்திய அமைச்சர் முரளிதரன் தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தற்போது வீட்டில் தனி அறையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தன்னால் பிறருக்கு கொரோனா பரவக் கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் அவர்கள் செய்துள்ள இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் ஒவ்வொருவரும் தங்களுக்கு இந்த வைரஸ் இருப்பதாக சந்தேகம் கொண்டால், ரத்த மாதிரி முடிவு வரும் வரை தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்