செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (07:24 IST)

மால்கள், வழிபாட்டுத்தலங்கள் திறக்க வழிகாட்டு முறைகள்: மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

மால்கள், வழிபாட்டுத்தலங்கள் திறக்க வழிகாட்டு முறைகள்
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக ஜூன் 8ஆம் தேதி முதல் மால்கள், ஹோட்டல்கள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மால்கள், ஹோட்டல்கள் வழிபாட்டுத்தளங்களை திறப்பதற்கான வழி காட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மால்கள், ஹோட்டல்கள் வழிபாட்டுத்தளங்களின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் ஸ்கேனிங் வைக்க வேண்டும் என்றும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் வழிபாட்டு தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக் கூடாது என்றும் அன்னதானம் வழங்கும் போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும் என்றும் அதிகமாகக் கூட்டம் கூடுவதை கண்டிப்பாக அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை மால்கள், ஹோட்டல்கள் வழிபாட்டுத்தளங்களின் நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், வழிகாட்டு முறைகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 8ஆம் தெதி முதல் மால்கள், ஹோட்டல்கள் வழிபாட்டுத்தளங்கள் ஆகியவை திறக்கப்படுவது உறுதி என தெரிகிறது