வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (11:02 IST)

ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடனை ஏற்ற மத்திய அரசு

ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதன் கடன் தொகை பல ஆயிரம் கோடியாக உயர்ந்தது. ஆம் ஏர் இந்தியாவின் ரூ.44 ஆயிரம் கோடியாக உள்ளது. இதனால் நஷ்டத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
 
இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் முக்கிய பங்குகள் நூறு சதவீதமும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இதர சொத்துக்கள் குறித்து முடிவெடுக்க மத்திய அரசு Air India Asset Holding Company Ltd எனும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. 
 
இதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான கட்டடங்கள், நிலம் போன்றவற்றை விற்று கடன் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.