புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (12:08 IST)

காவிரி வரைவு திட்டம் தாக்கல் : வாரியமா? குழுவா? ஆணையமா?

கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில், காவிரி விவகாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

 
கர்நாடக தேர்தல் காரணமாக ஒருசில காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்த மத்திய அரசு, தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் இன்று செயல் திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சீலிட்ட உறையில் காவிரி வரைவு திட்டத்தை யு.பி.சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
மத்திய அரசு தற்போது ஏற்படுத்தியுள்ள அமைப்பு காவிரி வாரியமா? குழுவா அல்லது ஆணையமா என்பது பற்றி தகவல் இல்லை. ஆனால், அந்த குழுவில் 10 பேர் இடம் பெறுவார்கள் எனவும், மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இடம் பெறுவார் என யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 
 
அந்த வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து தனது தீர்ப்பை அளிக்கும் எனத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கை வருகிற மே 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.