திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:46 IST)

குழந்தைகளை பள்ளியில் எப்போது சேர்க்க வேண்டும்? மத்திய கல்வி அமைச்சகம் புதிய உத்தரவு..!

students
குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தி செய்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில் 2 வயது 3 வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முறைக்கு இந்த திட்டம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றால் அந்த குழந்தைக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் புதிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் ப்ரீ கேஜி சேர்ப்பதற்கு மூன்று வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்றும் எல்கேஜி மற்றும் யுகேஜியில் சேர்க்க இந்த நான்கு வயது மற்றும் ஐந்து வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களை சேர்க்க வயது வரம்பு 5 என்ற நடைமுறை உள்ள நிலையில் மத்திய அரசு ஆறு வயது பூர்த்தி செய்தவுடன் தான் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran