1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:01 IST)

இன்று தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம்.. பதிவு, புதுப்பிக்கும் பணி நடைபெறும்..!

aadhar
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆதார் என்பது ஒவ்வொரு குடிமகனின் அவசிய தேவை என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது உட்பட பல்வேறு அம்சங்களுக்கு இந்த ஆதார் அட்டை அவசியம் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு முகாம் நடைபெற உள்ளதாகவும் இதில் பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் இன்று நடைபெறும் ஆதார் பதிவு முகாம்களை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva