1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (23:22 IST)

3 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

மேலூரில், திமுக கொடி கட்டி வந்த காரில், 3 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் , 3 பேரை கைது செய்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை...
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மேலூர் சிவகங்கை சாலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
 
அப்போது திமுக கொடி கட்டிய TN57 BA 9929 டவேரா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3 கோடி மதிப்பிலான 2.5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்ததையடுத்து, காரில் வந்த நத்தம் லிங்கவாடியை சேர்ந்த அழகு, நத்தம் சேர்வீட்டை சேர்ந்த பழனிச்சாமி, மற்றும் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த குமார் ஆகிய மூவரை கைது செய்ததுடன், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரூபாய் 10.770 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.