தமிழகத்துக்கு 295 கோடி…. உத்தர பிரதேசத்துக்கு 802 கோடி! மத்திய அரசு ஒதுக்கீடு

Last Updated: வியாழன், 21 மே 2020 (08:06 IST)

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவிலேயே அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு குறைவான நிதியையே தமிழகத்துக்கு திருப்பி அனுப்புகிறது.
இது சம்மந்தமாக நிதி ஒதுக்கீடு செய்யும் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையைத் தமிழகம் வைத்துள்ளது.

இதையடுத்து தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தொகை 5005.25 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு 802 கோடி ஒதுக்கியுள்ளது. அது போல பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்துக்கு 295 கோடி, ஆந்திராவுக்கு 248 கோடி, கர்நாடகாவுக்கு 247 கோடி, கேரளா மற்றும் தெலங்கானாவுக்கு முறையே 111 கோடி மற்றும் 105 கோடி என ஒதுக்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :