பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!!
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கினார்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பொதுத் தேர்வுகளை எழுதவரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக்கூடாது, ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், உடல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.