விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு!
விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு!
விஎல்சி வீடியோ பிளேயருக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய தொழில்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஎல்சி மீடியா பிளேயர் என்ற மென்பொருளுக்கு தடை விதித்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் எந்தவித விளக்கமும் இன்றி மென்பொருளுக்கு தடை விதிப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று விஎல்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பரிமாறும் குற்றச்சாட்டுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது
இந்த நிலையில் தற்போது அந்த தடையை நீக்கி கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விஎல்சி பிளேயரை இனி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விஎல்சி மீடியா பிளேயர் க்கு தடை நீக்கப்பட்டு இருப்பதால் நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
Edited by Siva