தொடர்புடைய செய்திகள்
- இந்தியா முழுவதும் 3வது டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்
- அரசு பணியாளர்கள் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? – மத்திய அமைச்சர் பதில்!
- கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய மத்திய அரசு!
- மோடி குடுத்த காசுன்னு நினைச்சு வீடு கட்டிட்டேன்! – மகாராஷ்டிர விவசாயி செய்த வேலை!
- வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! – மத்திய அரசு தளர்வுகள்!
12 மணி நேரம் வேலையா? மத்திய அரசு கூறுவது என்ன??
அரசு ஊழியருக்கான பணி நேரத்தை 9 லிருந்து 12 மணி நேரமாக நீடிக்கும் பரிசீலனை எதுவும் தற்போது இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் புதிய ஊதிய குறியீடு மசோதாவின் மூலம் நிறுவனங்களில், ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மற்றும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை நேரத்தை உயர்த்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது பணியாளர்களின் வேலை நேரமாக இருக்கும் 9 மணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தலாம். அவ்வாறு பணி நேரம் உயர்த்தப்பட்டால் 6 நாட்கள் செயல்பட்டு வந்த வேலை நாள் 4 நாட்களாக குறைக்கப்படும். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தில் 3 மணி நேரத்தை அதிகமாக பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது அரசு ஊழியருக்கான பணி நேரத்தை 9 லிருந்து 12 மணி நேரமாக நீடிக்கும் பரிசீலனை எதுவும் தற்போது இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
