1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt may announce about reservation

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு!? – மத்திய அரசு முடிவு!

Central Govt
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ உயர் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசு முன்னதாக கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது நடப்பு கல்வி நிதியாண்டில் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பு கோட்டாக்களில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல் மருத்துவ படிப்பின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அரசு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சித் தேர்தலிலும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: அண்ணாமலை