1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (21:04 IST)

மத்திய அரசின் அழைப்பிற்கு நன்றி: டெல்லியில் கமல்ஹாசன் பேட்டி!

மத்திய அரசின் அழைப்பிற்கு தனது நன்றி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு புதிய சினிமா சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது இதற்கு கமலஹாசன் சூர்யா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்த்து.
 
இந்த அழைப்பை அடுத்து கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இதனை அடுத்து அவர் டெல்லியில் பேட்டி அளித்த போது என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்தது நன்றி என்று கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்