ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (16:11 IST)

வேலையில்லா திண்டாட்டத்தை அரசால் தீர்க்க முடியாது: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்

வேலையில்லா திண்டாட்டம் என்ற பிரச்சனையை முழுவதுமாக அரசால் தீர்க்க முடியாது என்று மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் என்பவர் தெரிவித்துள்ளார்

வேலையில்லா திண்டாட்டம் உள்பட பல பிரச்சனைகளை பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் என்பவர் விழா ஒன்று பேசினார்

அந்த விழாவில் ’வேலை வாய்ப்புகளுக்கு அரசால் என்னென்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும் என்றும் வேலையில்லா திண்டாட்டம் பிரச்சனையை மத்திய அரசால் மட்டும் முழுமையாக சரி செய்து விட முடியாது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசுடன் இணைந்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கடந்த 2005 முதல் 2022 வரையிலான வேலைவாய்ப்பு கணக்கீடுகளை ஒப்பிடும்போது தற்போது வேலையின்மை பிரச்சனை பெரிய அளவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
ஆனால் ப  சிதம்பரம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசால் வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்றால் நீங்கள் உடனே இடத்தை காலி செய்துவிட்டு வெளியே செல்லுங்கள். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள எங்களிடம் திட்டங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்

Edited by Siva