வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:17 IST)

புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரி உயர்வு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Kuthiraivali rice
புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ள நிலையில் வெளிநாட்டில் புழுங்கல் அரிசியின் விலை தாறுமாறாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் வெளிநாடுகளில் அரிசி கிடைக்காமல் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அரிசி வாங்கி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. 
 
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் விலை அதிகரிக்கும் என்றும் இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறையும் என்றும் வெளிநாடுகளில் புழுங்கல் அரிசிக்கான விலை அதிகமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran