வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:13 IST)

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வசந்தபாலன்!

சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து இயக்குனர் வசந்தபாலன் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான அநீதி திரைப்படம் இதுபோன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நபர்களின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டத்தை பதிவு செய்திருந்தது.

இதுபற்றி வீடியோவில் பேசி வெளியிட்டுள்ள வசந்தபாலன் “தமிழக முதல்வர் ஓலா, ஊபர், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்காக என் சார்பாகவும், என் படக்குழு சார்பாகவும் நான் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.