செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:33 IST)

வெளிநாட்டில் இருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

வெளிநாட்டிலிருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டிரோன்களை தற்போது இந்தியாவிலேயே அதிக அளவு தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து டிரோன்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது 
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று கல்வித்துறைக்கான ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறை டிரோன்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
டிரோன்கள் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் எந்தவித தடையும் இல்லை என்றும் முழு டிரோன்களை மட்டுமே இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது