10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்- மத்திய அரசு அதிரடி
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாயங்களை பேருந்துகளிலும், கடைகளிலும் மக்கள் வாங்கத் தயங்கி வந்தனர். இதனால் பெரும் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் 10 ரூபாய் நாணயங்களும் பரிவர்த்தனைக்கு ஏற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டப்பூர்வமான தொகையைப் பரிவர்த்தனை செய்யும்போது, அந்த நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்ககூடாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவிதித்துள்ளார்.