1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central govt answer don't have mallaya documents

மல்லையா எவ்ளோ கடன் வாங்கினார் தெரியாது - நிதியமைச்சகம் அசால்ட் பதில்

Vijay mallaya
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் பற்றிய எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ராஜீவ் குமார் கரே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, விஜய் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட கடன்கள் குறித்து மத்திய நிதியமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
 
நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் “விஜய் மல்லையாவிற்கு வங்கிகள் கொடுத்த கடன் குறித்த ஆவணங்கள் எங்களிடம் இல்லை. எந்தெந்த வங்கிகள் அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தன?. அவருக்கு யாரெல்லாம் உத்தரவாதம் அளித்தார்கள் என்பது உட்பட எந்த ஆவணங்களும் எங்களிடமில்லை” என பதிலளித்துள்ளது.
 
மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ரவுடிகள் கைது சரி ; ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்களை தப்ப விட்டது ஏன்?