செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (08:48 IST)

கொரோனா கட்டுக்குள் வர மத்திய அரசு விதித்த ஐந்து யுக்திகள் என்ன தெரியுமா?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஐந்து வகை யுக்திகள் வகுக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா மீண்டும் பிரேசிலை தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து விடும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. 
 
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, தமிழ்நாடு, சட்டீஷ்கர், மத்தியப்  பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப்  மற்றும் பீகார் ஆகிய கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தின் முடிவில் ஐந்து வகை யுக்திகள் வகுக்கப்பட்டு இதனை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த யுக்திகள் பின்வருமாறு... 
 
1. கொரோனா பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல் வேண்டும். 
2. பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல் வேண்டும். 
3. பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல் வேண்டும். 
4. சரியான கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையை உறுதி செய்தல் வேண்டும். 
5. அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.