1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2020 (18:41 IST)

மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

தமிழகத்தில் ஏற்கனவே 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் முழு குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வெளிவந்த சந்தோஷமான செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தியாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
 
ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரிடம் தொடர்பில் இருந்தவர்கள் தான் இந்த 8 பேர்கள் என்றும் இவர்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிக்கு பின் கண்டுபிடித்து அவர்களுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தற்போது அவர்களது உடல்நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜய்பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் ஓரிரண்டு பேர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் எட்டு பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது