வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (11:07 IST)

வங்கி கணக்கில் ஆதாரை இணைத்தால்தான் சம்பளம்! – 100 நாள் வேலை முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பல மக்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் சம்பளம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரக வளர்ச்சி திட்டங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மூலம் பணிகள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கிராம மக்களுக்கு அன்றாடம் சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களது சம்பளத்தை பெற வங்கி கணக்கில் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஊடக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அதில் “100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் APBS முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான 100 நாள் பணியாளர்கள் APBS முறையின் கீழ் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 42 லட்சம் பேர் APBS முறையின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கவில்லை என அவர் பதிலில் தெரிவித்துள்ளார்.

APBS – Aadhaar Payments Bridge System என்பது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யும் செயல்முறையாகும். தங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள எந்த வங்கி கணக்கின் மூலமும் இந்திய அரசின் மானிய பலன்களை பெறுவதற்காக இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த வங்கி கணக்கில் பலன்களை பெற வேண்டுமோ அந்த வங்கி கிளைக்கு சென்று வங்கி எண்ணுடன் ஆதாரை இணைத்து, அனைத்து மானிய உதவிகளை இந்த கணக்கின் மூலம் பெற விரும்புவதாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Edit by Prasanth.K