அதிக சம்பளம் வேண்டாம்.. இந்தியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு..!
சமீபத்தில் இந்திய ஊழியர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிக சம்பளம் உள்ள வேலை வேண்டாம் என்று கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேனேஜர் உள்ளிட்ட அதிக சம்பளம் உள்ள வேலையில் நிறைய அழுத்தம் இருக்கும் என்றும் இதனால் மன நிம்மதி பாதிக்கப்படுகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே குறைந்த சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை மன நிம்மதியான வேலைதான் தங்களுக்கு ஏன் வேண்டும் என 88 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 70% அமெரிக்கர்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும் மன நிம்மதியான வேலை தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். உலகின் 10 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பில் அதிக நபர்கள் அதிக சம்பளத்தை விட மன நிம்மதி தான் தேவை என்று கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran