1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (20:24 IST)

CBSE 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி : மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்!!

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல் 1 முத 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்காது என்றும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில்,  சி.பி.எஸ்.இ  வழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.