புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (13:45 IST)

6 ஆயிரம் பேரை அடைக்க சிறை தயார்! – பஞ்சாப் ஆணையர் எச்சரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் பஞ்சாப்பில் சிறப்பு சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் சிறப்பு மருத்துவமனைகள் அமைத்தல், ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேசமயம் ஊரடங்கை பின்பற்றாமல் மக்கள் பலர் சாலைகளில் திரிவதும் பிரச்சினையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் 6 ஆயிரம் கைதிகளை அடைக்கும் வகையில் நான்கு சிறப்பு சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக பஞ்சாப் காவல் ஆணையர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அவர்களை சிறையில் அடைக்கவே இந்த சிறப்பு சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.