1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (15:41 IST)

பெண்கள் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குள்ளான கேள்வி! – வினாத்தாளில் இருந்து நீக்கிய சிபிஎஸ்சி!

சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக குறிப்பிடப்பட்ட கேள்வியை நீக்கியுள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்

இந்தியாவில் சிபிஎஸ்சி கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 11ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் பெண் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கேள்வி ஒரு சொற்றொடராக உள்ளது. அதில் பெண் விடுதலையால் மனைவிகள் தங்கள் கணவருக்கு கீழ்படிவதை நிறுத்தி விட்டார்கள்.அதுவே ஒழுக்கமின்மைக்கு காரணம் என்ற இன்னும் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் அதற்கு விடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்கள் சுதந்திரம் குறித்து தவறான கருத்தோட்டம் ஏற்படுத்தும் விதமாக இந்த கேள்வி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அந்த கேள்வி தவறான எண்ணத்தில் இடம்பெறவில்லை என்றும், அது தற்போது வினாத்தாளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.