1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (08:31 IST)

ரயில் விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு பரிந்துரை: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு சிபிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
ஒடிசாவில் சமீபத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் 275 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை சிபிஐக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
சிபிஐ விசாரணை செய்தால் தான் வேகமாகவும் சரியாகவும் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர் வைஷ்ணவ்  இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva