1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:51 IST)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு: ராகுல் காந்தி உறுதி..!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
 
 பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட வேறு எந்த பெரிய குற்றச்சாட்டும் எதிர்கட்சிகளால் சொல்ல முடியாத நிலையில் தற்போது திடீரென ஜாதி வாரி கணக்கெடுப்பு என்ற ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. 
 
ஏற்கனவே காங்கிரஸ் ஆளும் மாநிலமான  கர்நாடகாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்ததை சுட்டிக்காட்டி உள்ள ராகுல் காந்தி நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  
 
தேசிய அளவிலும் மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் சாதி வாரி புள்ளி விவரங்கள் கண்டிப்பாக தேவை என்றும் எனவே மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பிலும் நடத்த  வேண்டும் என்றும் பாமக உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதனை உறுதி செய்யும் வகையில் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva