செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:53 IST)

இது நாட்டை பிரிக்கும், பிளவுபடுத்தும் பேச்சு.. தயாநிதி மாறனின் இந்தி பேச்சு குறித்து கவிதா..!

தயாநிதி மாறனின் இந்தி மாநில மக்கள் குறித்த பேச்சு நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு என  டிஆர்எஸ் கட்சியின் கவிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

அரசியல் தலைவர்கள் ஒரு சில பிரிவினரின் வாக்குகளை பெறுவதற்காக மலிவான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றும் இது நாட்டை எப்படி எல்லாம் பிரிக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும் கவிதா தெரிவித்தார்.

மேலும் இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் கருத்தாக நான் பார்க்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியால் வழி நடத்தப்படும் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி தான் திமுக என்பதால் இந்த பேச்சு இந்தியா கூட்டணியின் பேச்சாக நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி இந்த கருத்தை ஆதரிக்கிறாரா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் சனாதன தர்மம் குறித்த பேச்சின்போதே ராகுல் காந்தி கண்டித்து இருந்தால் இந்த பேச்சு எழுந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.  

தயாநிதி மாறனின் கருத்துக்களுக்கு உடனே ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் அதை தெரிவிக்கவில்லை என்றும், இந்தி  பேசும் மாநிலங்களுக்கு எதிரானவர் ராகுல் காந்தி என்று தான் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva