1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (12:57 IST)

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து...

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.அப்போது லெவல் கிராஸிங் கேட் மூடப்பட்டதால்  மற்ற வாகனங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தன.
அப்போது சரக்கு  ஏற்றிவந்த லாரி ஒன்று ரயில் மீது மோதியதில் இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.லாரியிம் முன் பகுதி பெருத்த சேதம் அடைந்தது.லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
 
இந்த விபத்துக்கு டிரைவரின் கவனக் குறைவே காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.