வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:47 IST)

இனி ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் மாற்றலாம்? – மத்திய அரசு பரிந்துரை!

ஆதார் தகவல்களை சரிபார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் வங்கி சேவைகள் தொடங்கி பல்வேறு வகையான உபயோகத்திற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அடையாள அட்டை முக்கியமானதாக உள்ளது. ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தகவல்களை மாற்ற விண்ணப்பிப்பவர்களின் தரவுகளை UIDAI சரிபார்த்து அவர்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஆதார் அட்டையில் சேர்ப்பதற்காக மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரிபார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் திருத்தப்பட்ட ஆதார் அட்டைகளை எளிதில் விண்ணப்பித்து விரைவாக பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K