1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (13:14 IST)

பேருந்து பள்ளத்தில் விழாமல் இருந்திருந்தால் அனைவரும் செத்துருப்போம்.. ஜம்மு காஷ்மீர் விபத்து குறித்து பக்தர்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் பலியாகினார். இந்த சம்பவத்தின் போது பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்பதும் இதனால் பல படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து தப்பித்த ஒரு பக்தர் கூறிய போது ’பயங்கரவாதிகள் துப்பாக்கியில் சுட்டபோது எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் விழுந்தது. ஒரு மரத்துக்கும் பாறைக்கும் நடுவே பேருந்து சிக்கிக் கொண்டதால் தான் பலர் உயிர் தப்பித்தோம் .
 
பேருந்து மட்டும் பள்ளத்தில் விழாமல் இருந்திருந்தால் பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்த அனைவரையும் சுட்டுக் கொன்று இருப்பார்கள். பேருந்து பள்ளத்தில் விழுந்து எல்லோரும் கூச்சலிட்டபோது கூட பயங்கரவாதிகள் பேருந்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.
 
அனைவரும் கூச்சல் இடுவதை நிறுத்திய பிறகு அவர்கள் நாங்கள் அனைவரும் செத்து விட்டோம் என்று எண்ணி சுடுவதை நிறுத்தினார்கள் என்று பேருந்தில் பயணம் செய்த பக்தர் ஒருவர் கூறியுள்ளார்.
 
இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்பதும் 33 பேர் காயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran