1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (12:57 IST)

20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும்: பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு

மக்களவை பட்ஜெட் தொடரில் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக அரசு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்டு, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மக்களவை பட்ஜெட் தாக்கலில் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தற்போது 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், 20 ரூபாய் நாணயங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.